அல்லைப்பிட்டி பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த ஆன்மீக சுற்றுலா ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் குருநாகல் தேசிய புனித யோசவாஸ் திருத்தலம் மற்றும் அனுராதபுரம் றுவான் வெலிசாய பௌத்த விகாரையையும் பார்வையிட்டதுடன் தேசிய புனித யோசவாஸ் திருத்தலத்தில் இடம்பெற்ற திருப்பலி மற்றும் மகிழ்வூட்டல் செயற்பாடுகளிலும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் 12 மறையாசிரியர்களுட்பட 68 மாணவர்களும் உதவியாளர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

இச்சுற்றுலாவிற்கான நிதியனுசரணையை அல்லைப்பிட்டி அட்டை பண்ணை அங்கத்தவர்கள், அபிவிருத்தி குழுவினர், கனடாவில் வசிக்கும் செல்வி ஸ்ரெலா செபஸ்ரியாம்பிள்ளை மற்றும் மாணவர்கள் வழங்கியிருந்தனர்.

By admin