எழுவைதீவு பங்கு திருப்பாலத்துவ சபை சிறார்கள் மற்றும் பெற்றோர் இணைந்து முன்னெடுத்த சந்தை நிகழ்வு ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை உணவுகள், மரக்கறி, இறைச்சி, மீன் வகைகள், உள் ஊர் உற்பத்தி பொருட்கள் என்பன விற்பனை செய்யப்பட்டன.

சிறார்களிடையே திருப்பாலத்துவ சபை செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு நடைபெற்ற இந்நிகழ்வில் சிறார்கள், பெற்றோர் மற்றும் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin