கொழும்பு சீதுவை சுபுவத் அரண உளவியல், ஆன்மீகம், சமூக நலன் மற்றும் முழுமையான மனித உருவாக்க மையத்தில் நிறுவப்பட்ட 60 அடி உயரமுடைய இயேசு கிறிஸ்துவின் திருஉருவ திறப்புவிழா ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
உருவாக்க மைய நிர்வாகி அருட்தந்தை டரல் கூஞ்ஞ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொழும்பு பேராயர் பேரருட்தந்தை மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் கலந்து வெள்ளை இரும்பினால் வடிவமைக்கப்பட்ட 60அடி திரு உருவச்சிலையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், பௌத்த துறவிகள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
இந்தப் பிரம்மாண்டமான திருவுருவச்சிலை அருட்தந்தை டரல் கூஞ்ஞ அவர்களின் கலைநயமிக்க சிந்தனையில் உருவாக்கப்பட்டுள்ளது.

