மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை தினம் ஆடி மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின்; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் 2025ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பரிசளிப்பு நிகழ்வில் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A சித்தி பெற்ற மாணவிக்கு பாடசாலை சமூகம் சார்பாக ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி. மகிழ் இராஜதுரை அவர்களால் ஊக்குவிப்புத்தொகையும் 8A, S சித்தி பெற்ற மாணவிக்கு பாடசாலையின் பழைய மணவன் சந்தியாப்பிள்ளை சைமன் அவர்கள் மடிக்கணணியும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருக்குடும்ப மாகாண ஆலோசகர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராகவும் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வலிகாமம் வலயக்கல்வி ஆசிரியர் ஆலோசகர் திருமதி. நித்திய அருள்மொழிவர்மன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin