யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா ஆடி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி முகாமையாளர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2025ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை மூத்த ஆலோசனை மருத்துவரும் கல்லூரியின் பழைய மாணவருமான வைத்தியர் ராஜேந்திரா அவர்கள் பிரதம விருந்தினராகவும் இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பௌதீக அறிவியல் துறை விரிவுரையாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான திரு. பாலசங்கர் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin