வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முழங்காவில் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin