மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
10ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சுருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
அத்துடன் மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கிற்குட்பட்ட புனித செபஸ்தியார் சிற்றாலயத் திருவிழாவும் அன்றைய தினம் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

