யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட திருக்குடும்ப இளையோருக்கான ஒன்றுகூடல் ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் திருக்குடும்ப கன்னியர் மட விடுதியில் நடைபெற்றது.

திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண ஆலோசகர் அருட்சகோதரி மெற்றில்டா வசந்தி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “ஒளியை நோக்கிய பணயம்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருத்துரை, குழுச்செயற்பாடு, அனுபவ பகிர்வு, குறுநாடகம் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வை அருட்சகோதரி மர்லின் மற்றும் ஆயத்தநிலை சகோதரிகள் இணைந்து நெறிப்படுத்தியதுடன் அருட்சகோதரி செபோஜினி அவர்களால் “இயேசுவை போல ஒருங்கிணைந்த வளர்ச்சி நோக்கி” என்னும் தலைப்பில் சிறப்புரையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், இளையோரென 130 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

 

By admin