மாணவர்கள் மத்தியில் இறையழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கோடு யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மற்றும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருமட மாணவர்கள் இணைத்து முன்னெடுத்த “வந்து பாருங்கள்” இறை அழைத்தல் சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது.

புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரைகள், குறுநாடகம், பாடல், அனுபவ பகிர்வுகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 200 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin