பருத்தித்துறை மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான கள அனுபவ பயிற்சி ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது.
மறைக்கோட்ட பீடப்பணியாளர் குழு இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை பவனி, திருப்பலி, ஆன்மீக உரை, விளையாட்டுக்கள், கருத்தமர்வு, உதவு முறை பயிற்சிகள், என்பன இடம்பெற்ற்ன.
அருட்தந்தை இதயராஜ் மற்றும் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு வளவாளர்கள் இணைந்து கருத்தமர்வை நெறிப்படுத்தியதுடன் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் திரு. நிசாந்தன் அவர்கள் உதவு முறை பயிற்சியையும் முன்னெடுத்தார்.
சிறப்பு நிகழ்வாக யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மாணவர்களின் “வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை அருட்தந்தை செல்வரட்ணம் மற்றும் குருமட மாணவர்கள் இணைந்து குறுநாடகம், குழுச்செயற்பாடுகள், அனுபவ பகிர்வுகள் ஊடாக வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வுகளில் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 250 பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

