பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை S.J.Q ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் கலந்துரையாடப்பட்டு புதிய நிர்வாக தெரிவும் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ், பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன், பருத்தித்துறை பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் கஜீஸ்காந்த் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் 35 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

