புதுக்குடியிருப்பு மந்துவில் திருமுக ஆண்டவர் ஆலய திருவிழா வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

09ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வின்சன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin