யாழ். புனித மரியன்னை பேராலய பங்கிற்குட்பட்ட குருநகர் புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பாசையூர் பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை அன்னையின் திருச்சொருப தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

