யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று பாடசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை தெகிவளை திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி றேனுகா ஜோசப் அவர்கள் தலைமைதாங்கி வழிநடத்தினார்.
இந்நிகழ்வில் 2025ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ்ப்பாண வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி ஜொய்லின் ராஜி ஸ்ரான்லி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

