மன்னார் மறைமாவட்டம் தலைமன்னார் பங்கில் திருக்குடும்ப கன்னியர்களின் பணி ஆரம்பிக்கப்பட்டதன் 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆனி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் நடைபெற்றது.
தலைமன்னார் பங்குத்தந்தை அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் வழிநடத்தலில் பங்குமக்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
யூபிலி நிகழ்வில் பொன்விழா மலர் வெளியீடும் நினைவு சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் புனரமைக்கப்பட்ட கன்னியர் மடமும் ஆயர் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், அருட்தந்தையர்கள், திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி ஜொய்லின் ராஜி ஸ்ரான்லி, அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள், பங்கு மக்களென பலரும் கலந்துகொண்டனர்.

