மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னையின் வரவேற்பு சுரூபத்தில் ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதமடு அன்னையின் கொடியேற்றிவைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தால் வழங்கப்பட்ட இக்கொடி மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கு பாதயாத்தரை செல்லும் யாத்திரிகர்களின் ஆன்மீகத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்றிவைக்கப்பட்டது.

அத்துடன் அக்கராயன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்கந்தபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பமாகிய இப்பவனி அக்கராயன் சந்தி மருதமடு அன்னை திருச்சுரூபத்தினூடாக புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.

இப்பவனியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin