மன்னார் மறைமாவட்டம் பேசாலை வளர்கலை மன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவு திறப்புவிழா ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சத்தியராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து வரவேற்பு வளைவை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

தொடர்ந்து பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 71 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரச உத்தியோகத்தர்கள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin