சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 24ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
15ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் உரோமாபுரியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித யுவானியாரின் திருப்பண்டம் ஆலயத்தில் கொலுவேற்றிவைக்கப்பட்டது.
திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

