சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
4ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்தந்தை அல்பேட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை உரும்பிராய் பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது. இத்திருப்பலியில் பங்குமக்கள், அயற்பங்கு மக்கள், பிறமதத்தவரென பலரும் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

