உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையின் திருக்குடும்ப இளையோர் மற்றும் பிள்ளைகளால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 03ஆம் திகதி புதன்கிழமை பண்டத்தரிப்பு திருக்குடும்ப இல்லத்திலும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்திலும் இச்சிரமதான பணிகள் இடம்பெற்றன.

திருக்குடும்ப யாழ். மாகாண பாரிய குடும்பத்தின் அழைப்பையேற்று பண்டத்தரிப்பு திருக்குடும்ப இல்லத்தில் இடம்பெற்ற சிரமதானத்தில் 36 இளையோரும் 03 ஆசிரியர்களும் பங்குபற்றியதுடன் இந்நிகழ்வில் பாரிய குடும்ப மாகாண ஆலோசகர் அருட்சகோதரி மெற்றில்டா வசந்தி, அருட்சகோதரி ஈவோண், குழும அருட்சகோதரிகள், திருமட சார்பற்ற அருட்சகோதரி, மற்றும் பண்டத்தரிப்பு, இளவாலை பொதுநிலை அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற சிரமதான பணியில் ஆலய வளாகம் துப்புரவு செய்யப்பட்டதுடன் இப்பணியில் 32 திருக்குடும்ப பிள்ளைகளும் இரு ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி திட்ட விழிப்புணர்வு சிரமதானம் ஆனி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் பாடசாலை வளாகமும் சுற்றுப்புறமும் துப்புரவு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் திரு. ஜெயபிரதீப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

By admin