சாட்டி பங்கின் வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா சைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் றீச்சா பண்ணை, தாளையடி கடற்கரை, மற்றும் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் 75 மாணவர்களும் 15 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

