யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தீவக மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் யாழ். மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை எமில்ரன், மற்றும் அன்பிய ஆணைக்குழு வளவாளர்கள் கலந்து அன்பிய ஏழு படிமுறை தொடர்பாகவும் அன்பிய வாழ்வு தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கினர்.
தொடர்ந்து தீவக மறைக்கோட்ட செயற்குழு மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்கள் குழு தெரிவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 59 அன்பிய ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

