கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 30ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
25ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை நாவாந்துறை பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரனிஸ்லொஸ் ஸ்ரிபன்ராஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழாவை முன்னிட்டு பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் பாடல் வரிகள் மற்றும் மெட்டில் திரு. ஜேசுதாஸ் அவர்களின் இசை இயக்க ஒலிக்கலவையில் றெஜினா அவர்களால் பாடப்பட்ட கடலோரம் ஒரு வயலோரம் கத்தோலிக்க பாடலும் வைகாசி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறை அலை TV You Tube தளத்தினூடாக வெளியிட்டுவைக்கப்பட்டது.

