எழுவைதீவு பங்கு மறைக்கல்வி மாணவிகளுக்கான இறையழைத்தல் பாசறை வைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரிகள் கலந்து கருத்துரை, விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள் ஊடாக மாணவிகளை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 30ற்கும் அதிகமான மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் அன்றைய தினம் வணக்கமாத இறுதிநாள் திருப்பலிகள் எழுவைதீவு புனித தோமையார் ஆலயம் மற்றும் அனலைதீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்திலும் நடைபெற்றன.

இத்திருப்பலிகளில் மறைக்கல்வி சிறார்கள் மரியன்னையின் பல்வேறு உருவங்கள் தாங்கி பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin