திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணி புனித மரியாள் பேராலயத்தில் ஆரம்பமாகி பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

திருப்பலியை லிங்கநகர் பங்குத்தந்தை அருட்தந்தை றொய்ஸ்ரன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இப்பேரணியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென 2500ற்கும் அதிகமான பங்குபற்றியிருந்தனர்.

By admin