சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பொது மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆனி மாதம் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றிவைத்து புதிய மண்டபத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்தார்.

இக்கட்டுமானப்பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக 40 இலட்சம் ரூபாவை சுன்னாகம் புனித சூசையப்பர் ஆலய தந்தையர் மன்றத்தினர் வழங்கியுள்ளனர்.

By admin