மன்னார் மறைமாவட்டம் சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை அருட்பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 02ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா அன்று ஐந்து திருப்பலிகள் வெவ்வேறு நேரங்களில் அங்கு நடைபெற்றன. இத்திருப்பலிகளை மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை யோசப்தாஸ் ஜெபரட்ணம், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், மாந்தை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யூட் குருஸ் மற்றும் மன்னார் மறைமாவட்ட நிதியாளர் அருட்தந்தை சுரேஸ் ரெவல் ஆகியோர் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

இத்திருப்பலியில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துசெபித்தனர்.

By admin