அக்கராயன் பங்கின் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி ஆணைவிழுந்தான் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி ஆணைவிழுந்தான் சந்தியூடாக வன்னேரிக்குளம் புனித காணிக்கை மாதா ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களுடன் அக்கராயன் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.

By admin