புதுக்குடியிருப்பு பங்கில் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி வைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு திருத்தலத்தில் ஆரம்பமாகி புதுக்குடியிருப்பு சந்தி ஊடாக புனித சூசையப்பர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை மற்றும் குணமாக்கல் வழிபாட்டுடன் நிறைவடைந்தது.
பவனி நிறைவில் அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
இப்பவனியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென 600ற்கும் அதிகமானவர்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

