வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மண்டைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை செபமாலைத் தியானம் வைகாசி மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அலோய் அருணேஸ்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் பவனியாக மண்டைதீவு இறங்கு துறையில் ஆரம்பமாகி கடற்கரை புனித வியாகுல அன்னை சிற்றாலயத்தை சென்றடைந்தது.

இத்தியானத்தில் மறைக்கல்வி மாணவர்களால் மகிழ்ச்சிநிறை மறையுண்மைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இத்தியானத்ததை புனித அன்னாள் மகளிர் ஒன்றியத்தினர், மற்றும் இளையோர்கள் இணைந்து சிறப்பித்தனர்.

By admin