முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அருட்தந்தை சரத்ஜீவன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முல்லைத்தீவு பங்கு புனித கார்லோ இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் சிவக்குமார் கவியான்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 06 அணிகள் பங்குபற்றியிருந்தன.
இப்போட்டிகளில் பங்குபற்றிய அளம்பில் பங்கு பீடப்பணியாளர் அணி முதலாமிடத்தையும் முல்லைத்தீவு பங்கு இரண்டாமிடத்தையும் புதுக்குடியிருப்பு சென். ஜோசப் விடுதி மாணவர் அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

