யாழ். மறைமாவட்ட குருவும் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஓய்வுநிலை குருக்கள் இல்ல பொறுப்பாளருமான அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இளவாலை பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அவர்கள் சீரணி சந்தியிலிருந்து வாத்திய இசைகளுடன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
தொடர்ந்து அருட்தந்தை அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அருட்தந்தைக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், குருக்கள், துறவிகள், இறைமக்கள், அருட்தந்தையின் குடும்ப உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.
அருட்தந்தை ஜெயசீலன் அவர்கள் 2001ஆம் ஆண்டு வைகாசி மாதம் 26ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் அப்போதைய ஆயர் பேரருட்தந்தை தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

