எழுவைதீவு பங்கு மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு வைகாசி மாதம் 23ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விக்டோரியா, மேரி திரேசா மற்றும் மைதிலி ஆகியோர் வளவாளர்களாக கலந்து பாடத்திட்ட தயாரிப்பு, கற்பித்தல் முறை பயிற்சி என்பவற்றினூடாக மறையாசிரியர்களை வழிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 20க்கும் அதிகமான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin