நெடுந்தீவு பங்கு மறைக்கல்வி மாணவிகளுக்கான இறையழைத்தல் பாசறை வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நெடுந்தீவு புனித யாகப்பர் மற்றும் புனித மரியன்னை ஆலயங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள் கலந்து கருத்துரை, விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள் ஊடாக மாணவிகளை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 60ற்கும் அதிகமான மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.

