யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் வைகாசி மாதம் 23ஆம் திகதி கடந்த சனிக்கிழமை உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

இளவாலை மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழு இயக்குநர் கிளரீசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைக்கோட்டத்தில் இடம்பெற்ற அன்பிய பயிற்சி தொடர்பாகவும் தீவக மறைக்கோட்டத்தில் இன்றையதினம் நடைபெறும் அன்பிய பயிற்சி தொடர்பாகவும், அன்பிய ஆணைக்குழு அங்கத்தவர்களுக்கான மீள்கட்டமைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் மறைக்கோட்டங்களில் இடம்பெறும் ஆணைக்குழு கூட்டங்களின் போது கூட்டம் நடைபெறும் பங்கின் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சியொன்றை நடாத்துவதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் யாழ். மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை எமில்ரன், தீவக மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை லியான்ஸ் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

By admin