கோப்பாய் புனித மரியன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

இத்திருப்பலியில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேம்ஸ் ஜெனிஸ்ரன் ஆகியோரும் இணைந்து செபித்தனர்.

அத்துடன் கோப்பாய் புனித சூசையப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெயபாலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 10 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin