சுன்னாகம் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை குயின்ஸன் அவர்களின் தலைமையில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் இப்பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கான பாசறை வைகாசி மாதம் 23ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தையின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, திருப்பலி, ஆன்மீக உரைகள், விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி கிறிஸ்தவ பாட ஆசிரியர் திருமதி. மரியபவளம், குளமங்கால் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள் டிலாணி, அருளினி ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களையும் பெற்றோர்களையும் வழிப்படுத்தினர்.

