உரும்பிராய் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 22ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 51 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin