அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

