செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா அன்று மாலை திருவிழாவை முன்னிட்டு பங்கு வலயங்களுக்கிடையே நடாத்தப்பட்ட துடுப்பாட்ட தொடரின் இறுதிப்போட்டி இடம்பெற்றது.

தொடர்ந்து அண்ணாவியார் சூட்டா அவர்களின் நெறியாள்கையில் திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “யுவானியார்” தென்மோடி நாட்டுக்கூத்தும் பங்குமங்களால் ஆற்றுகை செய்யப்பட்டது.

By admin