பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றுஸ் தயாபரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 30 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
