மன்னார் மறைமாவட்டம் வங்காலை பங்கில் மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பண நிகழ்வு வைகாசி மாதம் 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை மில்ரன் தேவராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு வழிபாட்டுடன் பங்கின் 07 பிரசீடியங்களையும் இணைத்து புதிய மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜா அவர்கள் மரியாயின் சேனை புதிய கியூரியாவை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

தொடர்ந்து சேனையை வழிநடத்தி இறைபதமடைந்த ஆன்மீக இயக்குநர்கள், அங்கத்தவர்களுக்கான மௌன அஞ்சலியுடன் கூடிய பிரார்த்தனை, புதிய செயற்குழு உறுப்பினர் தெரிவு, கருத்துரைகள் என்பன இடம்பெற்றன.

கருத்துரைகளை திருமதி செபஸ்ரியம்மா மிராண்டா அவர்கள் “வங்காலை பங்கின் மரியாயின் சேனை வரலாறு” என்னும் தலைப்பிலும் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜா அவர்கள் “கியூரியாவின் கடமைகள் பொறுப்புகள்” என்னும் தலைப்பிலும் வழங்கினர்.

இந்நிகழ்வில் வங்காலை பங்கின் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை சுதன், அருட்சகோதரி புஸ்பா, மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளரும் கலந்துகொண்டனர்.

80 ஆண்டுகளுக்கு மேலாக வங்காலை பங்கில் இயங்கிவந்த மரியாயின் சேனை பிரசீடியங்கின் வேண்டுகோளுக்கமைவாக மூன்று மாத ஆயத்தத்தின் பின் மன்னார் மறைமாவட்டத்தின் 13வது கியூரியாவாக வங்காலை கியூரியா ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin