எழுவைதீவு பங்கிற்குட்பட்ட புனித தோமையார் முன்பள்ளி சிறார்களின் செயல்பட்டு மகிழ்வோம் விளையாட்டுபோட்டி வைகாசி மாதம் 21ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி பொறுப்பாளர் திரு. சஞ்சய்குமார் அவர்களின் தலைமையில் எழுவைதீவு புனித தோமையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் சிறார்கள் சென் தோமஸ், சென் அன்ரனிஸ் என இரு இல்லங்களாக பிரிந்து போட்டிகளில் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் எழுவைதீவு பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

