நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அறங்காவல் குழுமத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சொற்பொழிவும் கலந்துரையாடலும் வைகாசி மாதம் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள அமலமரித்தியாகிகளின் மாகாண இல்லமாகிய தொடர்பகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்தியா, தமிழ்நாடு, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மொழியியல் வரலாற்று ஆய்வறிஞர் திரு. விக்டர் அவர்கள் கலந்து “சொற்பிறப்பு ஆய்வின் முன்னோடிகள்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகளின் யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மக்களென 50ற்கும் அதிகமானோர் கலந்து பயனடைந்தனர்.

