மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான நீர்வேலி தெற்கில் அமைக்கப்பட்டுவந்த கருவி நிறுவனத்தின் நடுவப் பணியகத் திறப்பு விழா வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
கருவி நிறுவன கௌரவ தலைவர் திரு. கணபதிப்பிள்ளை சர்வானந்தா அவர்களின் தலைமையில், ‘கருவி’ நிறுவுனர் திரு. கனகலிங்கம் தர்மசேகரம் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர் திரு. சிவலோகநாதன் அவர்கள் கலந்து பணியக கட்டடத்தை திறந்துவைத்தார்.
தொடர்ந்து ‘கருவி தரு’ சிறப்புமலர் வெளியீடும் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் பலரும் பங்குபற்றினர்.
மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தி சுயதொழில் திறன்களை அவர்களுக்கு பயிற்றுவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு கடந்த 13 ஆண்டுகளாக செயலாற்றிவரும் இந்நிறுவனம் தற்போது தமக்கான புதிய கட்டடத்தை நலன்விரும்பிகளின் துணையோடு கட்டி திறந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

