சமூகத்தில் மாற்றுவலுவுள்ளோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் மன்னார் மறைமாவட்டம் வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் நடாத்தப்பட்டுவரும் ‘வரோட்’ மாற்றுத்திறனாளிகள் அமையம் ஆரம்பிக்கப்பட்டதன் 17ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு வைகாசி மாதம் 19ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வரோட் அமைய நிறைவேற்று இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை எவெறெஸ்ற் டயஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானபிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அரங்க நிகழ்வில் வரோட் அமைய பயனாளிகளின் கலை நிகழ்வுகளும் வரோட் அமையத்தில் 15 வருடங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 9 பணியாளர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அமைய பணியாளர்கள், பயனாளிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin