தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்களின் “தமிழன் கனவு” நூல் வெளியீடு வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி. ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கேணல் விதுஸாவின் தாயார் கலந்து புத்தகத்தை வெளியிட்டு வைக்க முதற்பிரதியை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் சண்டிலிப்பாய் ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் உபதேச திருக்கோவில் சிவஸ்ரீ சபா. வாசுதேவ குருக்கள் கலந்து ஆசியுரைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள், கல்வியளாலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.

