கல்விப்பணியாற்றும் யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான கருத்தமர்வு சித்திரை மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகி வைகாசி மாதம் 02ஆம் திகதி வரை மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.

மாகாண கல்வி ஆலோசகர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாகாண தலைவி அருட்சகோதரி ஜொய்லின் றாஜி ஸ்ரான்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரும்பிராய் றோ.க.த.க பாடசாலை அதிபர் திரு. இக்னேசியஸ் கிளெனி அவர்கள் கலந்து கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் மாணவர் மையக் கற்றல் அணுகுமுறை பற்றியும் மகப்பேறு மருத்துவ ஆலோசகர் திரு. றொகான் அவர்கள் கலந்து பெண்களின் உடல்நலம், நல்வாழ்வு, மற்றும் நோய் தடுப்புப் விழிப்புணர்வு பற்றியும் பாதுகாப்புக் குழு இணைப்பாளர் அருட்சகோதரி செபோஜினி தலைமையிலான குழுவினர் கலந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கினர்.

இந்நிகழ்வில் 32 அருட்சகோதரிகள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin