வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட முருங்கன் மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை இராசானந்தம் நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணி நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி அளவக்கை புனித கார்மேல் அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.

நற்கருணை வழிபாட்டை வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை மில்டன் நியூட்டன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

வழிபாட்டின் நிறைவில் மறைக்கோட்ட இளையோர் கூட்டம் நடைபெற்றது.

இப்பேரணியில் முருங்கன் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 100க்கும் அதிகமான இளையோர், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் பங்குபற்றினர்.

By admin