தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக யாழ்ப்பாண மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு சித்தரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் மறைக்கோட்ட ஊடக இணைப்பாளர் திருவுள சபை அருட்தந்தை மரியசெல்வன் பிராங் டவ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் மற்றும் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்சன் ஆகியோர் கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், கலந்துரையாடல், விழிப்புணர்வு பட காட்சிப்படுத்தல் என்பவற்றின் ஊடாக இளையோரை வழிப்படுத்தினர்.

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 45 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin